ஜப்பானில் 31 ஆண்டுகளில் முதல் திமிங்கில வேட்டை

31 ஆண்டுகளுக்குப் பின் ஜப்பான் கடலில் திமிங்கிலம் பிடித்துவரப்பட்ட நிகழ்வை அந்நாட்டு மீனவர்கள் பாரம்பரிய முறைப்படி உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சர்வதேச திமிங்கிலப் பாதுகாப்பு சங்கத்தில் உறுப்பினராக இருந்த ஜப்பான் அண்மையில் விலகியதை அடுத்து மீனவர்கள் திமிங்கில வேட்டைக்குக் கடலுக்கு சென்றனர். சில மணி நேரங்களில் கை என்ற மீனவரின் கப்பல் 27 அடி நீள பிரம்மாண்ட திமிங்கலத்துடன் கரை சேர்ந்தது. அதனை ஆரவாரித்துக் கொண்டாடிய மீனவர்கள், ஜப்பானிய பாரம்பரிய முறைப்படி அதன் மீது புனித நீர் தெளித்து பின் அதன் இரத்தத்தை கடலில் விட்டனர்.

சர்வதேச அளவில் ஜப்பானின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு இருந்தாலும், திமிங்கிலத்தை சுவைக்க பல ஆண்டுகளாகக் காத்திருப்பதாகவும் இது ஜப்பானின் பாரம்பரியம் என்பதால் தாங்கள் வெட்கம் கொள்ளத் தேவையில்லை என்றும் மீனவர் கை குறிப்பிட்டார்.

Wed, 07/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை