பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு நிலுவை பணத்தை வழங்காததால் மின் துண்டிப்பு

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்க வேண்டிய நிலுவையை செலுத்த நிதி அமைச்சு பணம் வழங்காததாலேயே கடந்த தினங்களில் சில மணி நேரம் மின் துண்டிப்பு மேற்கொள்ள நேரிட்டதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 

வாய்மூல விடைக்காக ஆனந்த அளுத்கம எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

தொடர்ந்து பதிலளித்த அமைச்சர், தினமும் 4,100மெகா வோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 175மெகாவோர்ட் குறைவடைந்ததால் மின் துண்டிப்பு ஏற்பட்டது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு மின்சார சபை வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க நிதி அமைச்சு தரவில்லை.

பணம் வழங்காவிடின் மின்சார சபைக்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்துவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக 4 மணி நேரம் மின்துண்டிப்பு ஏற்பட்டது. நிதியமைச்சு தூங்கி எழுந்து செயற்பட வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 

Fri, 07/12/2019 - 08:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை