அமெரிக்க – சீன பேச்சு அடுத்த வாரம் ஆரம்பம்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உச்சநிலைப் பேச்சு அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

அமெரிக்க வர்த்தச் செயலாளர் ரோபர்ட் லைத்தீஸர் சிறிய குழுவுடன் மூன்று நாள் பயணம் மேற்கொண்டு அடுத்த திங்கட்கிழமை ஷாங்காய் செல்லவுள்ளார்.

கடந்த மே மாதத்தில் இருதரப்புக்கும் இடையிலான பேச்சு தோல்வியில் முடிந்த பின்னர் உயர்நிலை வர்த்தக அதிகாரிகள் அடுத்த வாரம் முதல் முறையாக நேரடியாகச் சந்திக்கவுள்ளனர்.

இருப்பினும் உடன்படிக்கை ஏற்பட சிறிது காலம் ஆகலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் வெள்ளை மாளிகை பொருளியல் ஆலோசகர் லொரி குட்லோ சீனாவிடம் இருந்து முக்கிய குறுகிய கால சலுகைகளை எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

அமெரிக்க சோயா மொச்சைகளை சீனா அதிகம் வாங்குவதற்கான பேரப் பேச்சுகள் நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சோயா மொச்சைகளை வாங்கும் அரசாங்க, தனியார் நிறுவனங்களுடன் சீன அரசாங்கம் பேச்சு நடத்தி வருகிறது.

Thu, 07/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை