437,500 டொலருக்கு விலைபோன காலணி

நைக்கி நிறுவனத்தின் ‘மூன் ஷூ’ என்ற காலணி அதிக ஏலத்திற்கு விற்பனையான காலணியாக சாதனை படைத்துள்ளது.

நியூயோர்க்கில் இடம்பெற்ற ஏலத்தில் இந்த காலணி 437,500 டொலருக்கு விலைபோனது. இதற்கு முன் காலணி ஏலத்தில் பெறப்பட்ட அதிகத் தொகை 190,373 டொலர்களாகும்.

1984இல் இடம்பெற்ற ஒலிம்பிக் கூடைப்பந்து இறுதிச்சுற்றில் மைக்கல் ஜோர்டன் அணிந்த காலணி 2017இல் அந்தத் தொகையை வசூல் செய்தது.

அதன் இருமடங்கைத் தாண்டி விற்பனையான நைக்கி மூன் ஷூ கனடாவைச் சேர்ந்த மைல்ஸ் நடால் என்பவரால் வாங்கப்பட்டுள்ளது. மொத்தம் அத்தகைய 12 காலணிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலணியைத் தனது சொந்தக் காட்சியகத்தில் வைக்க நடால் திட்டமிட்டுள்ளார்.

Thu, 07/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை