நிலைபேறான ஜனநாயகத்தின் சார்பில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

இலங்கையர்களுக்கு ஐ.நா.நிபுணர் அழைப்பு

ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் பேணிப்பாதுகாப்பதற்கு இலங்கை மக்கள் ஒற்றுமைப்பட்டுச் செயற்பட வேண்டுமென அமைதியாக ஒன்று கூடுவதற்கும் சங்கங்களை அமைப்பதற்குமான உரிமைகளுக்கான ஐ.நா.விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் நைலட்சோஸி வூல் (Clement Nyaletsossi Voule) தெரிவித்துள்ளார்.  

 மக்கள் ஒன்றுகூடி தமது குரல்களைக் கேட்கச் செய்யும் ஆற்றலிலே, அமைதியாக ஒன்றுகூடுவதற்கும் சங்கங்களை அமைப்பதற்குமான உரிமைகளின் வேர்கள் தங்கியுள்ளன. இலங்கை நாடு இதுவரையிலடைந்துள்ள ஜனநாயக முன்னேற்றத்தை மேலும் மெருகூட்டுவதென்பது, இலங்கை மக்கள் ஐக்கியத்துடன் இயங்குவதிலேயே தங்கியுள்ளதென, இலங்கை விஜயத்தின் இறுதியில் தனது ஆரம்ப அறிக்கையை வெளியிட்டு மேற்படி விசேட நிபுணர் குறிப்பிட்டார்.

“இலங்கை பல சர்வதேச மனித உரிமைப் பொறிமுறைகளின் பங்குதாரத்தரப்பு நாடாகும். எனவே, அரசு பல மனித உரிமைக் கடப்பாடுகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக அரசிற்குப் பல தெளிவான கடப்பாடுகள் உண்டு. இக்கடப்பாடுகளைப் பிரதிபலிப்பதற்கு பல சட்டவாக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்கடப்பாடுகளை முழுமையாக அடைவதற்கு சமூகத்தின் பிரிவினைகள் அச்சுறுத்தலாக அமைகின்றன.” ஜனநாயக ரீதியான நன்மைகளின் பின்னடைவுகள் பற்றிய பரந்துபட்ட அச்சுறுத்தல்கள் சமூகத்தின் அனைத்துத் துறைகளாளும் தெரிவிக்கப்பட்டமை விசேட நிபுணரைக் கவலை கொள்ளச் செய்துள்ளது.” சுதந்திரத்திற்கான மக்களின் அபிலாசைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் நாட்டின் அரசியல் தலைவர்கள் நிராகரிக்கக்கூடாதென்பது மிக முக்கியமானது. போராடிப் பெற்ற ஜனநாயக உரிமைகள் தொடர்பான முன்னேற்றத்தைக் குறைத்து மதிப்பிடுதல் போன்ற விடயங்களை எதிர்வரும் தேர்தல்களின்போது அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐநா நிபுணர் தனது விஜயத்தின் போது இலங்கையின் வடக்கு தெற்கு கிழக்கு மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்தார். அவர் அரசாங்க அதிகாரிகளையும், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளையும், தொழிற்சங்கங்களையும் ஏனையோரையும் சந்தித்தார். அவரின் விஜயத்திற்கு முன்னரும் விஜயத்தின் போதும் இலங்கை அரசாங்கம் காட்டிய ஒத்துழைப்பையிட்டு நன்றி தெரிவிக்கிறார்.

விசேட அறிக்கையாளரின் முடிவுகளும் பரிந்துரைகளும் 2020 ஜூன் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அமர்வில் சமர்ப்பிப்பார்.   

Sun, 07/28/2019 - 13:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை