ரஷ்ய தாக்குதல்களில் சிரியாவில் 544 பேர் பலி

வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கடைசி தளத்தின் மீது இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிரிய அரச படை மற்றும் ரஷ்யா ஆரம்பித்த தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 544 பொதுமக்கள் கொல்லப்பட்டு மேலும் 2,000 க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இத்லிப் மாகாணம் மற்றும் அதனை ஒட்டிய ஹமாவில் கடந்த ஏப்ரல் 26 தொடக்கம் ரஷ்ய போர் விமானங்கள் மற்றும் சிரிய இராணுவம் பாரிய தாக்குதல்களை ஆரம்பித்தன.

இவ்வாறான நூற்றுக்கணக்கான தாக்குதல்களில் 130 சிறுவர்கள் உட்பட்ட 544 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக சிரிய உள்நாட்டு யுத்தத்தை கண்காணித்து வரும் மனித உரிமைகளுக்கான சிரியர்களின் வலையமைப்பு என்ற அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேற்கு இத்லிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை சிரிய இராணுவ ஹெலிகொப்டர் வீசிய பீப்பாய் குண்டுகள் காரணமாக 15 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Mon, 07/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை