எண்ணெய் கப்பலை விடுவிக்க பிரிட்டனுக்கு ஈரான் எச்சரிக்கை

ஜிப்ரால்ட்டர் கரைக்கு அப்பால் கைப்பற்றப்பட்ட தனது எண்ணெய்க் கப்பலை பிரிட்டன் விடுவிக்காவிட்டால் பதிலடி நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக ஈரான் மிரட்டியுள்ளது.

ஈரானிய நிர்வாக மன்றத்தின் செயலாளர் மோஹ்சன் ரெஸாயி, அந்தக் கப்பல் விரைவில் விடுவிக்கப்படாவிட்டால் தாங்கள் பிரிட்டிஷ் எண்ணெய்க் கப்பல் ஒன்றைக் கைப்பற்ற நேரிடும் என்று எச்சரித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத் தடைகளை மீறி, சிரியாவுக்குக் மசகு எண்ணெயை ஏற்றிச் சென்ற சந்தேகத்தின் பேரில் ஈரானின் ‘கிராஸ் 1’ என்ற கப்பலை ஜிப்ரால்ட்டர் அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.

ஆனால் அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க ஜிப்ரால்ட்டர் செயல்படுவதாக ஈரான் குற்றஞ்சாட்டுகிறது. அந்தக் குற்றச்சாட்டை பிரிட்டிஷ் பிரதேசமான ஜிப்ரால்ட்டர் மறுக்கிறது.

72 மணி நேரக் கால வரையறை முடிவடைந்ததைத் தொடர்ந்து மேலும் 14 நாட்களுக்குக் கப்பலைத் தடுத்துவைக்க ஜிப்ரால்ட்டர் உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. வளைகுடாவில் கிட்டத்தட்ட மோதிக் கொள்ளும் நிலைக்குச் சென்ற பின்னர் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் உச்சத்தைத் தொட்டுள்ள வேளையில் இந்தப் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஈரானியப் பொருளாதாரம் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது. அது பொருளாதார பயங்கரவாதம் என்று டெஹ்ரான் கூறுகிறது.

Mon, 07/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை