பாலத்தை திருடியவர்களை தேடி ரஷ்யாவில் விசாரணை

இரும்புத் திருடர்களால் ரயில் தண்டவாளப் பாலம் ஒன்று அகற்றப்பட்டது குறித்து ரஷ்யாவின் ஆர்டிக் பிராந்தியமான முர்மன்ஸ்கில் குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாலத்தின் நடுப்பகுதியில் 23 மீற்றர் நீளமான மற்றும் 56 தொன் எடை கொண்ட இரும்புத் தண்டவாளம் இனந்தெரியாக குற்றவாளிகளால் அகற்றப்பட்டிருப்பதாக உள்ளூர் அரச வழங்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிராந்திய தலைநகர் முர்மன்ஸில் இருந்து 170 கிலோமீற்றர் தூரத்தில் கைவிடப்பட்ட குடியிருப்புப் பகுதி ஒன்றுக்கு அருகில் தொலைதூர வனப்பகுதி ஒன்றுக்குள்ளேயே அந்தப் பாலம் உள்ளது.

அதிர்ஷ்டவசமாக இந்தப் பாலம் பயன்பாட்டில் இல்லை என அரச பத்திரிகையான ரெசிஸ்காயா குறிப்பிட்டுள்ளது. அருகில் இருக்கும் தொழிலிற்சாலைக்கு இந்த பாலத்திற்கு மேலால் ரயில்கள் அரிதான நிலத் தனிமங்களை எடுத்துச் சென்றன. இந்த வர்த்தகம் 2007இல் திவாலாகி உள்ளது.

இந்நிலையில் கடந்த மே மாதமே இந்தப் பாலம் காணாமல்போயிருப்பதை மக்கள் அவதானித்துள்ளனர். பாலத்தின் நடுப்பகுதி முழுமையாக காணாமல்போயுள்ளது.

ரஷ்யாவில் இரும்புக்காக கட்டுமானங்கள் திருடப்படுவது நீண்ட காலமாக பிரச்சினையாக இருந்து வருகின்றமை குறிக்கிடத்தக்கது.

Tue, 06/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை