தச்சுவேலைத் தளம், செயின், வாள் தடை; ஜனாதிபதி மீள் பரிசீலிக்க வேண்டும்

தச்சு வேலைத் தளங்களை தடைசெய்வது மற்றும் மரங்களை அறுக்கும் செயின் வாள்களுக்குத் தடைவிதிக்கும் திட்டத்தை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக் கோரிக்கை விடுத்தர்.

பாராளுமன்ற கட்டத்தொகுதியில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். இத்திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டால் ஆயிரக்கணக்கானவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துவிடுவதுடன், சவப்பெட்டியைக் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்றும் கூறினார்.

இந்த யோசனைத் திட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டால் மரத்தொழிலை நம்பியிருக்கும் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் நடுத்தெரிவுக்கு வந்துவிடும். அது மாத்திரமன்றி நாடும் பாரம்பரியமான தொழிலை இழந்துவிடும். எனவே இது சிறந்ததொரு யோசனை அல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். காடுகளை வளர்ப்பதன் ஊடாக மரத்தொழிலையும், சுற்றாடலையும் எம்மால் பாதுகாக்க முடியும்.

வெட்டப்படும் மரங்களுக்குப் பதிலாக புதிய மரங்களை நாட்ட முடியும். மரத் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக மரங்களை நாட்டும் நீண்டகால கலாசாரமொன்று நாட்டில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மரத்தொழில்துறையினரைப் பாதுகாக்கும் நோக்கில் தனது அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து வரியின்றி பலகைகளை இறக்குமதிசெய்ய சலுகை வழங்கியிருந்தோம். மலேசியா போன்ற நாடுகள் மரங்களை ஏற்றுமதி செய்கின்றன. எனவே நாமும் காடு வளர்ப்பின் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மகேஸ்வரன் பிரசாத் 

Sat, 06/08/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக