ஹற்றன் ரயில் நிலையத்தில் சர்வமத பிரார்த்தனையுடன் தானம்

பொசன் தினத்தை முன்னிட்டு நேற்று (16) ஹற்றன் ரயில் நிலையத்தில் சர்வ மத பிரார்த்தனை இடம் பெற்றதுடன் ரயில் பயணிகளுக்கும் பிஸ்கட் மற்றும் பால் பக்கட்டுக்கள் தானமாக வழங்கப்பட்டன.

இந் நிகழ்விற்கு இலங்கை வங்கியின் முன்னாள் தலைவரும் அங்கர் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான சுமி முனசிங்க இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.

இங்கு உரையாற்றிய அவர், நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளை போல் வாழ வேண்டும். இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். அதற்காகவே இந்த நிகழ்வை தான் முன்னெடுத்ததாகவும் இதன் அடுத்த கட்டமாக ஹற்றனில் இருந்து நல்லத்தண்ணீர் வரையில் வீதியின் இரு மருங்கிலும் பலா மரக் கன்றுகளை நடும் திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்காக பொது மக்கள் தங்கள் வீடுகளில் பலா மரக் கன்றுகளை வளர்த்து தமக்கு தந்துதவ வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

(கொட்டகலை தினகரன் நிருபர்)

Mon, 06/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை