பயணிகள் விமானத்தில் குண்டு புரளி: போர் விமானங்கள் விரைவு

குண்டுப் புரளி காரணமாக சிங்கப்பூரை நோக்கி வந்த பயணிகள் விமானம் ஒன்றின் பாதுகாப்பிற்காக இரு போர் விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பிலிப்பைன்சின் செபுவில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூரை நோக்கி வந்த 144 பயணிகளுடனான டீ.ஆர்385 ஸ்கூட் விமானத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து பொலிஸார் எச்சரிக்கப்பட்டனர்.

13 வயதான பெயர் குறிப்பிடாத பயணி ஒருவரே இந்தப் புரளியை கிளப்பி இருப்பதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த சிறுவன் தற்போது பொலிஸ் விசாரணைக்கு முகம்கொடுத்திருப்பதாக அந்தச் செய்திகள் கூறுகின்றன.

அந்த விமானம் சாங்கி விமான நிலையத்தில் மாலை 5 மணி அளவில் பாதுகாப்பாய்த் தரையிறங்கியதாக ஸ்கூட் நிறுவனம் தெரிவித்தது. அதிலிருந்த 144 பயணிகளும் 6 பணியாளர்களும் இயல்பாய்த் தரையிறங்கிச் சென்றதாக நிறுவனம் குறிப்பிட்டது.

இதன்போது இரு போர் விமானங்களும் நடு வானில் பயணிகள் விமானத்தை இடைமறித்தவாறு பாதுகாப்புக்குச் சென்ற நிலையில் அந்தச் செய்தி புரளி என்று தெரிந்ததை அடுத்து விலகிச் சென்றன.

Tue, 06/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை