போயிங் 737 ரக விமானங்களின் இறக்கை பகுதியில் கோளாறு

போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த சில விமானங்களின் இறக்கைப் பகுதியில் கோளாறு இருக்கலாம் என போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் இரண்டு, குறுகிய கால இடைவெளியில் விபத்தில் சிக்கி, 346 பேர் உயிரிழந்த விவகாரத்தால், அவற்றை தயாரித்த போயிங் நிறுவனம் பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில், மேக்ஸ் 8 ரகம் உள்ளிட்ட போயிங் 737 ரகத்தைச் சேர்ந்த சில விமானங்களில் இறக்கை பகுதியில் கோளாறு இருக்கலாம் என போயிங் நிறுவனம் கூறியுள்ளது.

விமான இறக்கையின் முன்விளிம்புப் பகுதியில் இந்த கோளாறு இருக்கலாம் என உப ஒப்பந்ததாரர் தெரிவித்ததாகவும், அந்த ரக விமானங்களை வாங்கிய நிறுவனங்களுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் போயிங் நிறுவனம் கூறியுள்ளது.

விமானங்களை சோதிக்குமாறு சம்மந்தப்பட்ட விமான நிறுவனங்களை கேட்டுக்கொண்டிருப்பதாகவும், சோதனையில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டால் அவை மாற்றியமைக்கப்பட்ட பின்னர் சேவையில் ஈடுபடுத்த வசதியாக இருக்கும் என்றும் போயிங் நிறுவனம் கூறியுள்ளது.

Tue, 06/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை