அமெரிக்க குப்பை கொள்கலன்களை திருப்பி அனுப்பியது இந்தோனேசியா

இந்தோனேசியா அமெரிக்காவுக்கு 5 கொள்கலன்களில் குப்பையைத் திருப்பியனுப்பியுள்ளது.

குப்பை அமெரிக்காவிலிருந்து இந்தோனேசியாவின் சுரபயா நகருக்கு மார்ச் மாத இறுதியில் அனுப்பப்பட்டது.

குப்பையில் காகிதம், பிளாஸ்டிக், போத்தல்கள், குழந்தை அணையாடை ஆகிய பொருட்கள் இருந்ததாக அதிகாரிகள் கூறினர். குப்பையில் காகிதம் மட்டுமே இருந்ததாக சுங்கச் சோதனைச் சாவடியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பில் இந்தோனேசியா குப்பையைக் குவிக்கும் இடமல்ல என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சு கண்டனம் தெரிவித்திருந்தது.

தற்போது ஜக்கர்த்தா துறைமுகம், பாத்தாம் ஆகியவற்றில் சோதனை நடந்துவருகிறது.

கடந்த மாதம் மலேசியாவிற்குள் கொண்டுவரப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள் அந்தந்த நாடுகளுக்குத் திருப்பியனுப்பப்படும் என்று மலேசியா தெரிவித்திருந்தது.

கனடாவில் இருந்து வந்த தொன் கணக்கான குப்பைகளை திருப்பி அனுப்புவதற்கு பிலிப்பைன்ஸ் உத்தரவிட்டிருப்பது இரு நாடுகளுக்கும் இடையில் முறுகலை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக சீனா உலகெங்கும் இருந்து பிளாஸ்டிக் குப்பைகளை பெற்றுவந்த நிலையில் தனது சுற்றுச்சூழலை சுத்தமாக்கும் நோக்கில் சீனா அந்த வழக்கத்தை கடந்த தடை கைவிட்டது.

அதனைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையான குப்பைகள் மலேசியா, இந்தோனேசியா மற்றும் குறைந்த அளவில் பிலிப்பைன்ஸ் உட்பட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு திருப்பப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300 மில்லியன் தொன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவைகளில் மெருமளவானவை குப்பை நிரப்பும் நிலங்களில் அல்லது கடலில் கொட்டப்படுவதாக இயற்கைக்கான உலகளாவிய நிதியம் குறிப்பிடுகிறது.

Mon, 06/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை