கோட்டாபயவின் மனுக்கள் மேன்முறையீட்டு மன்றால் நிராகரிப்பு

டீ. ஏ. ராஜபக்ஷ நினைவகத்தை அமைப்பது தொடர்பான வழக்கில் நிரந்தர மேல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை சவாலுக்குட்படுத்தி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த சீராய்வு மற்றும் எழுத்து மூலமான மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் அச்சலா வெங்காபுலி மற்றும் அர்ஜுன் ஒபேசேகர ஆகியோரே மேற்படி மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

டீ. ஏ. ராஜபக்ஷ நினைவகம் அமைப்பது தொடர்பான வழக்கில் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் 6 பேர் எழுப்பிய பூர்வாங்க ஆட்சேபனைகளுக்கு அப்பால் சென்று நிரந்தர மேல் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும் தகுதியைக் கொண்டுள்ளது என கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி நிரந்தர

மேல் நீதிமன்றம் தீர்மானித்தது. மேற்படி இரண்டு மனுக்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் எழுப்பிய ஆட்சேபனைகளில் நிரந்தர நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய உத்தரவுகள் தொடர்பான விண்ணப்பங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட வேண்டும்.

அவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படக் கூடாது என்று கூறியிருந்தார்.

சட்டமா அதிபரின் கருத்தை ஆதரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்யத் தீர்மானித்தது.

 

Wed, 06/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை