யுனிசெப் இலட்சனையில் 'பெற்றோர்' சின்னம் நீக்கம்

குழந்தை மற்றும் பெற்றோர் சின்னம் பொறிக்கப்பட்ட 70 வருடம் பழைமையான யுனிசெப் இலட்சனையில் பெற்றோர் சின்னம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்களிப்பு அவசியம் என்பதனை வலியுறுத்தும் வகையிலேயே பெற்றோர் சின்னத்தை தற்காலிகமாக நீக்கியுள்ளதாக யுனிசெப் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசெப், சிறுவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியில் பெற்றோரின் அர்ப்பணிப்புடனான பங்களிப்பு இன்றியமையாதது என்றும் இலங்கை பெற்றோர் தமது பிள்ளை வளர்ப்பில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்பதையும் இதனூடாக அறிவுறுத்தியுள்ளது.ஒவ்வொரு பிள்ளையின்

வளர்ச்சியிலும் முதல் ஐந்து வருடங்களும் முக்கியமானவை. இதில் பெற்றோரின் பங்களிப்பு அதிகம் உண்டு. இக்காலப்பகுதியில் ஒவ்வொரு செக்கனுக்கும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நரம்புசார் இணைப்புக்கள் என்ற வேகத்தில் சிறுவரின் மூளை வளர்ச்சிக் காணும். கற்பதற்கு, வளர்வதற்கு மற்றும் சமூகத்துக்கு அவசியமான முழுமையான பங்களிப்பை வழங்குவதற்கு அவசியமான சந்தர்ப்பத்தை இக்காலப்பகுதியே வழங்குகின்றது.

அதனடிப்படையில் தமது பிள்ளைகளை பார்த்துக்கொள்வதற்கு தாய்ப்பாலூட்டுவதற்கு சிறந்த ஆரம்பத்தை வழங்குவதற்கு கொடுப்பனவுடன் கூடிய விடுமுறை மற்றும் தாய்ப்பாலூட்டுவதற்கான இடைவேளைகள் போன்ற குடும்ப நட்பு கொள்கைகள் அவசியம். இலங்கை இதில் முன்னேற்றம் கண்டுள்ளபோதும் பொது மற்றும் தனியார் துறைகளில் இதற்காக கிடைக்கும் சலுகைகள் தொடர்ச்சியானதாக இல்லை என்பதனால் குடும்பங்கள், வேலைத்தளங்கள் மற்றும் பொருளாதார ரீதியில் சிறந்த குடும்ப நட்பு கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லுமாறும் யுனிசெப் கோருகின்றது.

இதற்கமைய பெற்றோர் இருவருக்கும் கிடைக்கக் கூடியதாக ஆகக் குறைந்தது ஆறு மாதங்கள் கொடுப்பனவுடன் பெற்றோர் விடுமுறை, வேலைக்குத் திரும்பும் பெண்களுக்கு தாய்ப்பாலுட்டுவதற்கான இடைவெளிகள், தரமான சிறுவர் சேவைகள் என்பவற்றுக்கு இலங்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்றும் யுனிசெப் கேட்டுக் கொண்டுள்ளது.

எனினும் பெற்றோர் நீண்ட மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டியது இதற்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளதாகவும் யுனிசெப் தெரிவிக்கின்றது. அத்துடன் ஐந்து வயதுக்கு குறைவான குழந்தையொன்றை கொண்டிருப்பது , இலங்கைப் பெண்களின் தொழில் ரீதியான பங்களிப்பினை குறைப்பதாக 2017 ஆம் ஆண்டுக்கான உலக வங்கி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

 

Wed, 06/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை