கோட்டாவின் மேன் முறையீட்டை நிராகரிக்க சட்ட மாஅதிபர் தீர்மானம்

டி.ஏ ராஜபக்‌ஷ நூதனசாலை வழக்கு; 5 நீதிபதிகள் குழாமை நியமிக்க கோரிக்ைக

டி.ஏ ராஜபக்ஷ நூதனசாலை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஆராய்வதற்கென ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவொன்றை நியமிக்குமாறு அவரது ஜனாதிபதி சட்டத்தரணி நேற்று உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தார்.

இதேவேளை இவ்வழக்கு தொடர்பில் ட்ரயல் எட் பார் நீதிமன்றத்தால் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதியன்று முன்மொழியப்பட்ட தீர்ப்புக்கு சவாலாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு வழக்கு ஜுலை 18 ஆம் திகதியன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அத்துடன் தாக்கல்

செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டை நிராகரிப்பதற்கு சட்டமா அதிபர் தீர்மானித்திருப்பதாக அவர் சார்பில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி பிரியந்த நவன நேற்று தெரிவித்தார்.

மேலும் 2018 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க சட்டத்தின் பிரிவு 12பி(1) இற்கமைய உச்ச நீதிமன்றம் தனது நியாயாதிக்கத்தை முழுமையாக அமுல்படுத்த தேவையில்லையெனக்கூறி மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நேற்று நீதிமன்றத்திற்கு அறிக்கையொன்றையும் சமர்ப்பித்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளான புவனேக்க அளுவிகார, எல்.டி.பி தெஹிதெனிய மற்றும் பிரித்தி பத்மன் சுரசேன ஆகிய மூவரும் டி.ஏ ராஜபக்ஷ நூதனசாலை தொடர்பான வழக்கை விசேட நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்துமாறு தீர்ப்பளித்திருந்தனர். இத்தீர்ப்பை மாற்றித் தருமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீடு செய்திருந்தார்.

சட்டமா அதிபர் மேற்படி வழக்கு தொடர்பில் ஏழு பேருக்கு எதிராக குற்றம் சுமத்தியிருந்தார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பிரசாத் ஹர்சன டி சில்வா, முன்னாள் பொது முகாமையாளர் பத்ரா உதுலாவத்தி கமலதாச மற்றும் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான சுதம்மிக்கா கெமிந்த ஆர்டிகல, சமன் குமார ஆப்ரஹாம் கலபத்தி, தேவகே மஹிந்த சாலிய மற்றும் சிறிமதி மல்லிகா குமாரி சேனாதீர ஆகியோரே கூட்டுத் தாபனத்துக்கு சொந்தமான பணத்தை மோசடி செய்திருப்பதாக சட்டமா அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரொமேஷ் டி சில்வா,சுகத் கல்தெர,சனத் விஜேவர்தன ஆகியோரும் சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நவன மற்றும் உதார கருணாரத்னவும் கலந்துகொண்டனர்.

 

Tue, 06/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை