ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது இலங்கை

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 7 ஆவது ஆட்டத்தில், இலங்கை அணி டக்வெர்த் லுவிஸ் விதிப்படி 34 ஓட்டங்களால் ஆப்கான் அணியை வீழ்த்தி இந்த உலக கிண்ணத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஆப்கான் அணி தனது இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு 187 ஒட்டங்களை இலக்காக நிர்ணயித்தது. டக்வொர்த் லுவிஸ் விதிப்படி, ஆப்கானிஸ்தான் அணி 41 ஓவர்களில் 187 ஓட்டங்கள் பெற வேண்டும் என வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பத்துப்பாட்ட வீரர்களாக செஷாட்-சஷாய் இருவரும் களமிறங்கினர்.சேஷாட் 7 ஓட்டங்கள் பெற்ற நிலையில் மலிங்கவின் பந்தில் ஆட்டமிழந்து சென்றார்.

பின்னர் சஷாய் உடன் இணைந்தார் ரஹ்மட் ஷா அவரும் வந்த வேகத்தில் இரு ஓட்டங்கள் பெற்ற நிலையில் உதானவின் பந்தில் ஆட்டமிழந்து சென்றார்.பின்னர் வந்தார் ஹஸ்மதுல்லா சஹீடி அவரும் வெறும் 4 ஓட்டங்களுக்கு ஆட்மிழக்க சஷாய் உடன் இணைந்தார் முகம்மட் நபி அவரும் தன் பங்கிற்கு 11 ஓட்டங்கள் பெற்ற போது திஸர பெரோவின் பந்தில் போல்ட் ஆனார்.ஆப்கான் அணிக்கு நம்பிக்கை தரும் விதம் விளையாடிய சஷாய் 30 ஓட்டங்கள் பெற்ற போது பிரதீபின் பந்தில் ஆட்டமிழந்து சென்றார்.முகம்மட் நபி 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க ஆப்கான் அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 57 ஓட்டங்களை பெற்றிருந்தது.பின்னர் அவ் அணியின் தலைவர் குலாப்தீன் நயீப் சர்தான் ஆகியோர் 6 ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக 64 பகிர்ந்த வேளை அணியின் தலைவர் நயிப் 23 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.பின்னர் ரஷீத் கான் இரு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க போட்டி சற்று பின்னடைவைச் சந்தித்தது. டவ்லட் சர்தான் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.ஆப்கான் அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த நஜீபுல்லா சர்தான் 6 நான்கு ஒட்டங்கள் அடங்கலாக 43 ஓட்டங்கள் பெற்ற போது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து சென்றார். ஹசன் ஆறு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க ஆப்கானிஸ்தான் அணி 32.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டையும் இழந்து 152 ஓட்டங்களை பெற்று 34 ஓட்டங்களால் டக்வெர்த் லுவிஸ் முறைப்படி இலங்கை அணி வெற்றி பெற்றது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக பிரதீப் 4 விக்கெட்டையும் மலிங்க 3 விக்கெட்டையும் உதான,பெரேரா தலா ஒரு விக்கெட்டை பதம் பார்த்தனர்.

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி நாணயச்சுழற்சியில் வென்று களத்தடுப்பை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களான திமுத் கருணரத்ன மற்றும் குசல் பெரேரா இருவரும் இலங்கை அணிக்கு சிறப்பான தொடக்கம் தந்து முதல் விக்கெட்டுக்கு 92 ஓட்டங்கள் பெற்றுக் கொடுத்தனர். அடுத்தடுத்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

குசல் பெரேரா மாத்திரம் களத்தில் நிற்க ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து வெளியேற தொடங்கினர். மொஹமட் நபியின் ஓவருக்கு அடுத்த ஓவரில் தனஞ்ஜய டி சில்வா ஆட்டமிழக்க, திசர பெரேரா ரன்-அவுட் மூலமாக ஆட்டமிழந்தார். தொடர்ச்சியாக இசுரு உதானவும், இலங்கை அணிக்காக ஓட்டங்களை குவித்திருந்த குசல் பெரேராவும் (78) ஆட்டமிழக்க இலங்கை அணி முற்றுமுழுதாக தங்களுடைய கட்டுப்பாட்டை இழந்தது.

இலங்கை அணி 33 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது, இதனால் ஆட்டம் 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இறுதியாக, சுரங்க லக்மால் மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் துடுப்பெடுத்தாடிய நிலையில், போட்டியின் இடையில் மழை குறுக்கிட்டது. மழையின் காரணமாக போட்டி நிறுத்தப்படும் போது, இலங்கை அணி 33 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை பெற்று இக்கட்டான நிலையில் இருந்தது. பின்னர் ஆரம்பமான இந்தப் போட்டியில் அணிக்கு தலா 41 ஓவர்களாக நிர்ணயிக்கப்பட்டதுடன், இலங்கை அணி 201 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அதிகபட்சமாக குசல் பெரேரா 78 ஓட்டங்களும், திமுத் கருணரத்ன 30 ஓட்டங்களும் குவித்தனர். குசல் பெரேரா தனியாளக நின்று தனது துடுப்பாட்டத்திறமையை வெ ளிக்காட்டியமை விசேட அம்சமாகும்.ஆனால் ஆப்கான் அணி சார்பாக 35 ஓட்டங்கள் உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி சார்பாக இசுரு உதான அடித்த சிக்ஸரை தவிர வேறு எவரும் சிக்ஸர் அடிக்க வில்லை என்பது முக்கிய அம்சமாகும்.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நபி 4 விக்கெட்டும், தவ்லத் ஜட்ரன் மற்றும் ரஷித் கான் தலா, 2 விக்கெட்டும் வீழ்த்தினர். போட்டியின் ஆட்ட நாயகனாக நுவான் பிரதீப் தெரிவானார்.

Wed, 06/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை