4628 குடும்பங்களுக்கு புதிய சமுர்த்தி பத்திரங்கள்

கிண்ணியாவில் ்

கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள 4628 குடும்பங்களுக்கு புதிதாக சமுர்த்தி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு கிண்ணியா பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் (25) இடம் பெற்றது.

சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் புதிய சமுர்த்தி பயனாளிகளை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இவை வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கலந்து கொண்டு புதிய பத்திரங்களை வழங்கி வைத்தார்.

அங்கு உரையாற்றிய பாராளுமன்ற, உறுப்பினர் கிண்ணியா பிரதேசத்தில் சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றமை காரணமாக இவ் விடயத்தினை அமைச்சர் தயா கமகேயின் கவனத்திற்கு கொண்டுவந்து புதிய சமுர்த்தி வங்கி ஒன்றினை அமைப்பதற்கான அனுமதியினைப் பெற்று இருப்பதாகவும் அதனை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கிண்ணியாவை பொறுத்தமட்டில்1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் புதிய சமுர்த்தி பயனாளிகள் இணைக்கப்பட்டதன் பின்னர் 25 வருடங்களின் பின் இவ்வருடமே புதிய அரசாங்கத்தினால் 4268 குடும்பங்களுக்கான சமுர்த்தி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்தோடு பிரதேச செயலகத்திற்கு சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய சமுர்த்தி பயனாளிகளை இணைக்கும் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

திருமலை மாவட்ட விசேட நிருபர

 

 

Thu, 06/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை