முஸ்லிம் பாடசாலைகளின் 2ஆம் தவணை கல்வி நடவடிக்ைககள் நேற்று ஆரம்பம்

திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் பாடசாலைகளின் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைக்காக நேற்று (10) ஆரம்பிக்கப்பட்ட போது, 90 வீதமான மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளித்திருந்தனர் என அதிபர்கள் தெரிவித்தனர்.

ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டுத் தாக்குதலையடுத்து, நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில் மே மாதம் 13ஆம் திகதி சிங்கள, தமிழ் பாடசாலைகள் 2 ஆம் கல்வி நடவடிக்கைக்காக ஆரம்பிக்கப்பட்டன.

ஆனால் முஸ்லிம் பாடசாலைகளுக்கு ரமழான் நோன்பு விடுமுறை என்பதால் நேற்று 2ஆம் தவணைக்காக முஸ்லிம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, மாணவர்கள் உற்சாகத்தோடு சமுகமளித்திருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

மாணவர்களின் அதிகரித்த வரவானது பெற்​ேறார் தங்கள் பிள்ளைகளின் கல்வி மீதுள்ள அக்கறையை எடுத்துக் காட்டுவதாகவும் அமைந்துதுள்ளதென அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் பெரிய வகுப்பு மாணவர்களின் ஒத்துழைப்புடன் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டது. இதன் பின்னர்தான் நேற்று பாடசாலைகளை உரிய பாதுகாப்பு ஒழுங்குகளுடன் ஆரம்பித்து கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து சீராக நடத்திச்செல்வதற்கு நடவடிக்கை எடுக்ககப்பட்டது .

இந்த வருடத்துக்கான பாடத்திட்டங்களை இருக்கின்ற காலப்பகுதிக்குள் முடிப்பதற்கு விசேட செயற்றிட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அதிபர்கள் தெரிவித்தனர்.

கிண்ணியா மத்திய நிருபர் -

Tue, 06/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை