வடமேற்கு சிரியாவில் உக்கிர மோதல்: 100 போராளிகள் பலி

வடமேற்கு சிரியாவில் அரச படை மற்றும் ஜிஹாதிக்களைப் பிரதானமாகக் கொண்ட போராளிகளுக்கு இடையில் தீவிரமடைந்திருக்கும் மோதல்களில் இரு தரப்பிலும் 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் மூன்று மில்லியன் மக்க வசிக்கும் இத்லிப் பிராந்தியம் சர்வதேச யுத்த நிறுத்த உடன்படிக்கை மூலம் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில் அரச படை மற்றும் அதன் கூட்டாளியான ரஷ்யா கடந்த ஏப்ரல் தொடக்கம் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

இதில் ஜிஹாதிக்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் உக்கிர மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதல்களில் 75 அரச எதிர்ப்பு போராளிகளும் 29 அரச படையினரும் கொல்லப்பட்டிருப்பதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. ஹமா மாகாணத்தின் வடக்காக மோதல்கள் மையம்கொண்டிருப்பதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கிளர்ச்சியாளர் பகுதிகள் மீது அரச படை கடந்த புதன்கிழமை நடத்திய வான் தாக்குதல்களில் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

முன்னாள் அல் கொய்தாவின் கிளையாக செயற்பட்ட ஹயாத் அல் தஹ்ரிர் அல் ஷாம் இந்த பிரந்தியத்தில் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 06/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை