முன்னாள் இன்டர்போல் தலைவர் இலஞ்சம் பெற்றதாக ஒப்புதல்

இன்டர்போல் முன்னாள் தலைவர் மெங் ஹொங்வெய் 2 மில்லியன் டொலருக்கு மேல் இலஞ்சம் பெற்றதை ஒப்புக்கொண்டதாக சீனா அறிவித்துள்ளது.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் தியான்ஜினிலுள்ள நீதிமன்றம் எதிர்வரும் திகதி ஒன்றில் தீர்ப்பு வழங்கவிருப்பதாக அரச ஊடகம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச பொலிஸான இன்டர்போலின் சீனாவைச் சேர்ந்த முதல் தலைராக இருந்த மெங் கடந்த செப்டெம்பரில் சீனா சென்றிருந்தபோது திடீரென காணாமல்போனார்.

எனினும் ஜனாதிபதி ஷி ஜன்பிங்கின் ஊழலுக்கு எதிராக நடவடிக்கையின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக சீன கம்யூனிசக் கட்சி பின்னர் உறுதி செய்திருந்தது.

எனினும் அவர் மீதான குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டது என்று தற்போது பிரான்ஸில் உள்ள மெங்கின் மனைவு குறிப்பிட்டுள்ளார். கடந்த மே மாதத்தில் அவருக்கு பிரான்ஸ் அரசியல் அடைக்கலம் வழங்கியது. சீன நிர்வாகத்தால் கைது செய்யப்பட்டதைத் தொடார்ந்து 65 வயதான மெங் தனது இன்டர்போல் தலைமை பதவியை இராஜினாமா செய்தார்.

Fri, 06/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை