பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜயவர்தன

பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன நேற்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதையிட்டு அவர் நாடு திரும்பும் வரையான காலப்பகுதியில் பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன கடமையாற்றுவார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன நேற்று முதல் பதில் பாதுகாப்பு அமைச்சராக தனது

கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுக் காலை சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

லக்ஷ்மி பரசுராமன்

Tue, 05/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை