வடகொரியா மற்றுமொரு ஏவுபொருள் சோதனை

வட கொரியா அடையாளம் காணப்படாத குறைந்தது ஒரு ஏவுபொருள் ஒன்றை ஏவி சோதனை மேற்கொண்டிருப்பதாக தென் கொரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

பல குறுகிய தூர ஏவுகணைகளை சோதித்து ஒரு வாரத்திற்குள்ளேயே வட கொரியா மற்றொரு சோதனையை மேற்கொண்டுள்ளது. தலைநகர் பியோங்யானில் இருந்து வட மேற்காக உள்ள சினோ ரியில் இருந்து கிழக்கை நோக்கி இந்த ஏவுபொருள் விசப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தை தடைப்பட்டிருக்கும் நிலையில் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே வட கொரியா இவ்வாறான சோதனைகளை மேற்கொள்வதாக அவதானிகள் நம்புகின்றனர்.

எனினும் இந்த இழுபறியை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க தூதுக் குழு ஒன்று தென் கொரியா விஜயம் மேற்கொண்டுள்ளது.

சோதிக்கப்பட்ட இந்த ஏவுபொருள் 420 கிலோமீற்றர் தூரம் பறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Fri, 05/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை