மாகாண சபை தேர்தல்; உச்ச நீதிமன்ற ஆலோசனையை ஜனாதிபதி பெற வேண்டும்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு  

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.  

தேர்தல் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர். அதற்கு முன் மாகாண சபை தேர்தல் நடத்துவது பற்றி சட்ட மாஅதிபரின் கருத்தைக் கேட்டறிய விரும்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் கூறினார்.  

உச்ச நீதிமன்றத்திடம் சட்ட ஆலோசனை கோரும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை. ஜனாதிபதியினால் மட்டுமே அவ்வாறான சட்ட ஆலோசனையைக் கோர முடியும்.

எனவே அவ்விதம் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கேட்பதாக ஜனாதிபதி தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.    

Tue, 05/28/2019 - 10:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை