சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் அணி வெற்றி

நாவிதன்வெளி முகநூல் தொலைக்காட்சி அமைப்பு நடாத்திய அணிக்கு ஆறு ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை நாவிதன்வெளிப் பிரதேசத்திலுள்ள அமிரலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றதுது.

10இற்கும் மேற்பட்ட கழகங்கள் பற்குபற்றிய இப்போட்டியில் இறுதிப் போட்டிக்கு சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் கழகமும், நாவிதன்வெளி வேப்பயடி உதயா விளையாட்டுக் கழகமும் தெரிவாகின.

அணிக்கு 6 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன் பிரகாரம் சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக்கழகம் 6 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 86 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் அணித்தலைவர் முஸ்பிக் 20 பந்துகளை எதிர்கொண்டு 49 ஓட்டங்களை அணிக்காகப் பெற்றுக் கொடுத்தார்.

பதிலுக்கு 6 ஓவர்களுக்கு 87 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய நாவிதன்வெளி வேப்பயடி உதயா விளையாட்டுக்கழகம் 6 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 48 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதை சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக்கழக தலைவர் முஸ்பிக் பெற்றுக் கொண்டார்.

தொடர் ஆட்ட நாயகன் விருதை நாவிதன்வெளி வேப்பயடி உதயா விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் தலைவர் காந்தன் பெற்றுக் கொண்டார்.

(நாவிதன்வெளி தினகரன் நிருபர்)

Tue, 05/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை