கதவை உடைத்த நடுவர் மீது இந்திய சபை நடவடிக்கை இல்லை

நோ போல் விவகாரத்தில் கோபம் அடைந்த நடுவர் கதவை உடைத்ததற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த நடுவர் நைஜல் லொங். ஐ.பி.எல் போட்டியின் போது நோபால் விவகாரம் தொடர்பாக அவருடன் பெங்களுர் அணித் தலைவர் விராட் கோலி, உமேஷ்யாதவ் ஆகியோர் வாக்குவாதம் செய்தனர்.

இந்த அதிருப்தி காரணமாக நடுவர் நைஜல் அரங்கு திரும்பிய போது கோபம் அடைந்து நடுவர்களுக்கான அறை கதவை காலால் உதைத்தார்.

இதனால் கதவு சேதம் அடைந்தது. பின்னர் அவர் தனது தவறை உணர்ந்து கொண்டு சேதத்திற்கான தொகையை வழங்கினார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடுவர் நைஜல் மீது இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக கிரிக்கெட் சபை நிர்வாகி ஒருவர் கூறும் போது “ஐ.பி.எல் போட்டியில் நைஜல் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அவர் கோபத்தில் அப்படி நடந்து கொண்டார். இது மனித இயல்புதான். அவர் தனது தவறை உணர்ந்து சேதத்துக்கு பணம் செலுத்தி விட்டார். இத்தோடு இந்த பிரச்சினை முடிந்துவிட்டது” என்றார்.

Mon, 05/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை