கடுமையான பாதுகாப்பு கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று திருப்பலி பூஜைகள்

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் நேற்று முதற் தடவையாக நாட்டின் அனைத்து கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் திருப்பலி பூஜைகள் இடம்பெற்றன.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருப்பலி பூஜைகள் இடம்பெற்றதுடன் பூசைக்கு வருகை தந்த அனைத்து மக்களும் முழுமையான

சோதனையின் பின்னரே ஆலயங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்ததுடன் திருப்பலி பூசைகள் நிறைவுறும் வரை ஆலயத்தை அண்டிய பிரதேசங்களில் முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

ஆலயங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருடன் இணைந்து ஆலயங்களில் நியமிக்கப்பட்டிருந்த சிவில் குழுக்களும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.

கடந்த உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலை யடுத்து கிறிஸ்தவ ஆலயங்களில் வழிபாடுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. கடந்த சில தினங்களுக்கு முன் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வழங்கிய ஆலோசனைக்கமைய பங்குத் தந்தையர்களால் நேற்று திருப்பலிப் பூசைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. எவ்வாறெனினும் ஆலயங்களில் இடம்பெறும் ஞாயிறு மறைப்பாடசாலைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Mon, 05/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை