காத்தான்குடியில் பிரத்தியேக கல்வி நிலையங்களுக்கு புதிய நடைமுறை

காத்தான்குடி நகர சபைப் பிரிவிலுள்ள சகல பிரத்தியேகக் கல்வி நிலையங்களும் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, மாலை 5 மணியுடன் மூடப்பட வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டதாக, காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபைப் பிரிவிலுள்ள சகல பிரத்தியேகக் கல்வி நிலையங்களையும் ஒழுங்குபடுத்தும் பொருட்டு, காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பரின் தலைமையில் நகர சபை மண்டபத்தில் நேற்றுமுன்தினம் (05) நடைபெற்ற கூட்டத்தின்போது, இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், அவர் கூறினார்.

அத்தோடு, வெள்ளிக்கிழமைகளில் சகல பிரத்தியேகக் கல்வி நிலையங்களும் மூடப்பட வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

சீருடை இல்லாத பிரத்தியேகக் கல்வி நிலையங்களில் கற்கும் 6 ஆம் வகுப்பு தொடக்கம் 13 ஆம் வகுப்பு வரையான மாணவர்கள் பாடசாலை சீருடையை அணிய வேண்டும் என்பதோடு, கல்வி நிலையங்களினால் மாணவர்களுக்கு அடையாள அட்டைகள்  வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், அவர் தெரிவித்தார்.

அனைவரினதும் பாதுகாப்பு தொடர்பில் அனைவரும் கவனமாகச் செயற்பட வேண்டும் என்பதோடு, அனைவரும் கண்காணிப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டதாகவும், அவர் கூறினார்.

(எம்.எஸ்.நூர்தீன் -புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)

Tue, 05/07/2019 - 13:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை