அழுத்தத்தை விடவும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கும் கட்டாயத்தில் நான் இருந்தேன்

அழுத்தத்தை விடவும், துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க வேண்டிய கட்டயாம் ஏற்பட்டிருந்தது எவ்வாறாயினும் ஆரம்பத்தில் அழுத்தத்திற்கு முகங்கொடுத்திருந்தேன். இறுதியில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது அரைச் சதத்தை கடந்து, தனது துடுப்பாட்டத்திற்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டேன் என அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்த திமுத் கருணாரத்ன, “நீண்ட நாட்களுக்கு பின்னர் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடுவது அவ்வளவு இலகுவான விடயமல்ல. நான் ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடுவதற்கு தடுமாறியதுடன், அழுத்தத்திற்கும் உள்ளானேன். எனினும், பின்னர் பந்துகளை சரியாக கணித்து துடுப்பெடுத்தாடியதுடன், எந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஓட்டங்களை வேகமாக பெறவேண்டும் என்பதை அறிந்துக்கொண்டேன்.

இதற்கிடையில் அதிர்ஷ்டவசமாக எனது இரண்டு ஆட்டமிழப்பு வாய்ப்புகள் எதிரணியால் தவறவிடப்பட்டன. அதனை பயன்படுத்திக்கொண்டு ஓட்டங்களை பெற்றுக்கொண்டேன். இவ்வாறு ஓட்டங்களை பெற்றதால், என்னிடம் தற்போது தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளது”

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தடுமாறிய இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ இப் போட்டியில் தனது முதலாவது ஒருநாள் அரைச் தத்தை கடந்து 74 ஓட்டங்களை குவித்திருந்தார்.

அவிஷ்க பெர்னாண்டோ அற்புதமான வீரர். அவருடைய திறமை எம் அனைவருக்கும் தெரியும். அதிரடியாக ஆடக்கூடியவர் என்பதுடன், நிதானமான இணைப்பாட்டத்தையும் கட்டியெழுப்பக்கூடிய வீரர். அவரிடமிருந்து என்ன தேவை என்பதை ஏற்கனவே கூறியுள்ளோம். துரதிஷ்டவசமாக அவரால் சதத்தை பெற முடியவில்லை. ஆனால், உலகக் கிண்ணத்தில் அவரால் பெரிய சதம் ஒன்றினை பெறமுடியும் என நினைக்கிறேன்” என தன்னுடன் இன்னிங்ஸை ஆரம்பித்த இளம் துடுப்பாட்ட வீரர் குறித்து அணித் தவைர் திமுத் குறிப்பிட்டார்.

நாம் முழுமையாக 50 ஓவர்கள் துடுப்பெடுத்தாடுவதற்கு திட்டமிட்டோம். துரதிஷ்டவசமாக திசர மற்றும் மெதிவ்ஸ் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், சற்று தடுமாறினோம். எனினும், மெண்டிஸ் மற்றும் திரிமான்னே ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடினர். விக்கெட்டுகள் கைவசம் இருந்தால், இறுதி ஓவர்களில் வேகமாக ஓட்டங்களை குவிக்க முடியும் என எண்ணினோம். ஆட்டத்தின் மத்திய பகுதியில் தடுமாறினாலும், கடைசி 10 ஓவர்களில் ஓட்டங்களை வேகமாக பெற்றுக்கொண்டோம்” என்றார்.

Fri, 05/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை