தலைப்பிறை தென்படவில்லை; நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்

RSM
தலைப்பிறை தென்படவில்லை; நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்-New Moon for the Ramadhaan 1440 has not been sighted-Fasting Starts on Tuesday

புனித ரமழான் முதல் நோன்பை நாளை மறுதினம் 07 ஆம் திகதி ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹிஜ்ரி 1440 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தப்பாகத்திலும் தென்படாததால் ஷஃபான் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து புனித ரமழான் முதல் நோன்பை நாளை மறுதினம் 07 ஆம் திகதி ஆரம்பிப்பதென கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் ஆகியன உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

புனித ரமழான் தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (05) மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றது. இதன் போதே மேற்படி தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழுத் தலைவர் கலீபதுல் குலபா மௌலவி ஜே. அப்துல் ஹமீத் பஹ்ஜி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம் மாலிக் ஆகியோர் இந்த தீர்மானத்தை அறிவித்தனர்.

(ஸாதிக் ஷிஹான்)

Sun, 05/05/2019 - 19:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை