நாளை காலை 7.00 மணி வரை நீர்கொழும்பில் ஊரடங்கு

RSM
நாளை காலை 7.00 மணி வரை நீர்கொழும்பில் ஊரடங்கு-Negombo Poruthota Curfew

இருவருக்கிடையிலான வாய்த் தர்க்கம் குழு மோதலானது

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நாளை (06) காலை 7.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில், பொலிஸ் ஊடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

நாளை காலை 7.00 மணி வரை நீர்கொழும்பில் ஊரடங்கு-Negombo Poruthota Curfew

நீர்கொழும்பு, கொச்சிக்கடை, பலகத்துறை பகுதியில் இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம், இரு குழுவினருக்கு இடையிலான மோதலாக மாறி அமைதியற்ற நிலையை தோற்றுவித்ததை அடுத்து, பொலிசார் மற்றும் முப்படையினர் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
நாளை காலை 7.00 மணி வரை நீர்கொழும்பில் ஊரடங்கு-Negombo Poruthota Curfew

ஆயினும் குறித்த அமைதியற்ற நிலை மேலும் நீடிக்காதிருக்கும் வகையில், நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நீர்கொழும்பு, கொச்சிக்கடை, பலகத்துறை, கட்டுநாயக்க, திவுலபிட்டி, கொட்டதெனியாவ, பமுணுகம, ரத்தொலுகம, சீதுவை, துங்கல்பிட்டிய, கட்டான ஆகிய பகுதிகளில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தமது விமானச்சீட்டை காண்பித்து நீர்கொழும்பு ஊடாக விமான நிலையத்திற்கு பயணிக்க முடியும் என, ருவன் குணசேகர தெரிவித்தார்.

நாட்டின் தற்போதுள்ள நிலையில், இனங்களுக்கிடையில் அமைதியற்ற வகையிலான நிலையை தோற்றுவிப்போர் தொடர்பில், மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ் தலைமையகத்தினால் அனைத்து பொலிஸ் நிலயங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.

Sun, 05/05/2019 - 20:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை