பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் ரிஷாட் விஜயம்

மக்களின் அவலங்களை கேட்டறிந்தார் அமைச்சர் ரிஷாட்

முஸ்லிம்கள் மீது கடந்த திங்கட்கிழமை(13) மாலை நடத்தப்பட்ட  தாக்குதலால் சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள்,  வீடுகள், வியாபார நிலையங்கள் மற்றும் உடைமைகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழுவினர் நேற்று (14) சென்றுபார்வையிட்டுள்ளனர்.  

மினுவாங்கொடைகொட்டாரமுல்ல, பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதியில் ஹெட்டிபொல, கொட்டம்பபிட்டி மற்றும் பிங்கிரிய தேர்தல் தொகுதியில் கினியம உள்ளிட்ட பாதிக்கப்பட்ட இடங்களுக்கே அமைச்சர் ரிஷாட் தலைமையிலானகட்சியின் முக்கியஸ்தர்கள் சென்றுள்ளனர்.

இதன்போது, வன்முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களையும் சமய பெரியார்களையும் சந்தித்து அமைச்சர் குழுவினர் ஆறுதல் கூறினர். பாதிப்புக்குள்ளான முஸ்லிம்கள்மிகவும் அச்சமுற்ற நிலையில் தமக்கு நேர்ந்த அவலங்களைகண்ணீர் மல்க அமைச்சரிடம் விபரித்தனர் 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பிலும், சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்குவது தொடர்பிலும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும்,பாதிக்கப்பட்டவர்கள் தமது சேத விபரங்களை கிராம சேவகர்களின் ஊடாக வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமென அமைச்சர் உறுதியளித்தார். 

இதேவேளை, வடமேல் மாகாணத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களினதும் சேத விபரங்களை முறைப்படி திரட்டுமாறு அங்கிருந்த கட்சியின் பிரதேச முக்கியஸ்தர்களிடம் கேட்டுக்கொண்ட அவர், இந்த பணிகளை அவசரமாக மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.  

கட்சியின் முக்கியஸ்தர்களான இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நஸீர்,அமைச்சரின் இணைப்பு செயலாளர் இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ், பிரதேச சபை உறுப்பினர் இர்பான், கட்சியின் முக்கியஸ்தர் ஹுசைன் பைலா  ஆகியோர் அக்குழுவில் அடங்கியிருந்தனர்.

 

 

Wed, 05/15/2019 - 16:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை