அம்பாறையில் வரட்சியால் 39,421 பேர் பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக, 11,381 குடும்பங்களைச் சேர்ந்த 39,421 பேர்பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் ஏ.சி.எம். றியாஸ்  தெரிவித்தார்

திருக்கோவில் பிரதேசத்தில் 306 குடும்பங்களைச்சேர்ந்த 1,110 பேரும்,  உஹன பிரதேச செயலாளர் பிரிவில் 32  குடும்பங்களைச்  சேர்ந்த 145 பேரும், தெஹியத்தகண்டி பிரதேசத்தில் 690 குடும்பங்களைச்சேர்ந்த 2,570 பேரும், பொத்துவில் பிரதேசத்தில் 195 குடும்பங்களைச்சேர்ந்த 3738 பேரும், மஹாஓயா பிரதேசத்தில் 1,574 குடும்பங்களைச்சேர்ந்த 5,994 பேரும், அம்பாறை பிரதேசத்தில் 96 குடும்பங்களைச்சேர்ந்த 356 பேரும், நாவிதன்வெளி பிரதேசத்தில் 2,649 குடும்பங்களைச்சேர்ந்த 8,329 பேரும், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 1,078 குடும்பங்களைச்சேர்ந்த  3,577 பேரும், அக்கரைப்பற்று பிரதேசத்தில் 62 குடும்பங்களைச்சேர்ந்த 204 பேரும், பதியத்தலாவ பிரதேசத்தில் 3,168 குடும்பங்களைச்சேர்ந்த 11,282 பேரும், தமணபிரதேசத்தில் 531 குடும்பங்களைச் சேர்ந்த2,124 பேரும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

வரட்சியால் பாதிக்கப்பட்ட மேற்படி பகுதிகளில் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்குவதாகவும், அம்மக்களுக்கான குடிநீரை பிரதேச செயலகங்களும், பிரதேச சபைகளும் இணைந்து நீர்த்தாங்கிகள் மூலம் பெற்றுக்கொடுக்கின்றன.  இருந்தபோதிலும், போதியளவான குடிநீரின்றி பொதுமக்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

 

 

Wed, 05/29/2019 - 15:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை