அதிவேக நெடுஞ்சாலைகளில் மேலதிக நடைமுறைகள்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கட்டுநாயக்க மற்றும் தெற்கு  அதிவேக நெடுஞ்சாலைகளில், உள் நுழைவுகள் மற்றும் வௌியேற்றங்களுக்காக,  மேலதிக நடைமுறைகளை அமுல்படுத்துவதற்கு, வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை  எடுத்துள்ளது.

இதேவேளை, ஒரு மணித்தியாலத்தில் உள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்களின் எண்ணிக்கையை மேலும்  அதிகரிக்கவும் உத்தேசித்துள்ளதாக, அதிவேக நெடுஞ்சாலைகளின் நடவடிக்கை மற்றும் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு,  கட்டுநாயக்க மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளின் பயன்பாடுகள்  அதிகரிக்கும் என்பதைக்  கருத்திற்கொண்டே, இந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்தப் பண்டிகைக் காலத்தில் பிரதானமாக நுழைவாயில்கள் மற்றும் வெளியேறும்வாயில்களில் அதிக போக்குவரத்து நெரிசல் நிலவும் வாய்ப்புள்ளதாகவும், அவற்றைச்  சீராக்கும் நோக்கிலேயே  இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,  அதிவேக நெடுஞ்சாலைகள் போக்குவரத்துப் பிரிவுப்  பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு நுழைவாயிலால்  நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை 240 ஆகக்  காணப்படுவதாகவும், அவற்றை 360 ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.      

( கொட்டகலை குறூப் நிருபர் )

Thu, 04/11/2019 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை