நல்லிணக்கத்தை வழியுறுத்தும் திகன சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்

A Mohamed Fais

கண்டி திகன, துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும் சித்திரைப்புத்தாண்டு நிகழ்வுகள் இன்று (20) இடம்பெற்றன.

பல்லின மக்கள் வாழும் இப்பிரதேசத்தில் இனங்களிடையே நல்லுறவைக் கட்டியெழுப்பும் முகமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த வருடம் மார்ச் 05 ஆம் திகதி கண்டி திகன, தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற இனமுறுகலால் உயிரிழப்புக்களும் பாரிய உடமையிழப்புக்களும் ஏற்பட்டன.

இந்நிலையில் இப்பிரதேச மக்களிடையே நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை ஏற்படுத்தும் பொருட்டு அப்பிரதேசத்தில் பொது அமைப்புக்களால் பல சமூக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு முன்னெடுக்கப்பட்ட ஒரு நிகழ்வுதான் தெல்தனிய துனுவில மகாபோதி மகாவித்யாலய மைதானத்தில் மூவினங்களும் பங்கு பற்றும் தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.

இந்த சித்திரைப்புத்தாண்டு நிகழ்வில் விளையாட்டு போட்டிகள், அழகுராணிப் போட்டிகள் கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன. இந்நிகழ்வில் மூவினத்தினரும் பங்குபற்றினர். நிகழ்ச்சியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களும் அதிதிகளால் வழஙக்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் ஆர்.எம். ஜயரத்ன பண்டார, பெளத்த மதகுரு பேரகெட்டிய சிறீ ஜினரத்னாதிபதி கீன பலசே உபாலி ஞானீஸ்வர, கிராம சேவகர் பத்மகுமார, மௌலவி மொகமட் நிசார்தீன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திகன இனக்கலவரம் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த இறந்த சாரதியின் கிராமமே இந்த துனுவில கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 04/20/2019 - 22:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை