உருளைக்கிழங்கில் விடுதி

அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கைக் கொண்டு 2 படுக்கைகள் கொண்ட தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள இடாஹோ என்ற மாகாணத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டில் 28 அடி நீளம் 12 அகலம் 12 அடி உயரத்தில் 6 தொன் இராட்ச உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட்டது.

இது தான் உலகிலேயே மிகப்பெரிய உருளைக்கிழங்கு ஆகும். இந்த உருளைக்கிழங்கு தற்போது 2 படுக்கைகள் கொண்ட தங்கும் விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதில் ஒரு நாளைக்கு தங்க 200 டொலர்கள் வாடகையாக வசூலிக்கப்படுகிறது. எனினும் இது இன்னும் ஒரு மாதத்திற்கு முழுவதும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Sat, 04/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை