சர்வதேச தீவிரவாதத்தை ஒழிக்க உதவுவதாக பிரதமரிடம் அமெரிக்கா உறுதி

இலங்கையில் இடம்பெற்ற துரதிரஷ்டவசமான குண்டுத்தாக்குதல் சம்பவங்களை அமெரிக்கா வன்மையாக கண்டிப்பதுடன், இத்தருணத்தில் இலங்கைக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று மாலை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இவ்வாறு தெரிவித்தாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரதமரிடம் அமெரிக்க ஜனாதிபதி இத்தொலைபேசி அழைப்பில் மேலும் கூறியுள்ளதாவது, சர்வதேச தீவிரவாதத்தை முற்றாக துடைத்தெறிய தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் அமெரிக்க இலங்கைக்கு வழங்கத் தயாராகவுள்ளது.

குண்டுவெடிப்புச் சம்பவங்களால் உயிரிழந்தவர்களுக்கு ஆழந்த இரங்கலை தெரிவிப்பதுடன், காயமடைந்தவர்களுக்கு ஆழ்ந்த கவலையையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று அமெரிக்க ஜனாதிபதி பிரதமரிடம் தெரிவித்துள்ளதாகவும், இச்சந்தர்ப்பத்தில் இலங்கை மக்களுக்கு நட்புறவுடன் அமெரிக்கா வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு பிரதமர் நன்றித் தெரிவித்துள்ளதாகவும் மேற்படி பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tue, 04/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை