கொலன்கொல்ல மக்களிடம் கையளிப்பு: புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி

புனரமைக்கப்பட்ட பதவிய, சிறிபுர கொலொன்கொல்ல குளத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்விலும், அங்கு இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்விலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவின் பேரில், 'சிறிசர பிவிசும' எனும் 500குளங்களை புனரமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் இலங்கை இராணுவத்தினரால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட பதவிய, சிறிபுர கொலொன்கொல்ல குளத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (06)  இடம்பெற்றது.

அத்தோடு வடக்கையும், தெற்கையும் இணைக்கும் இனங்களுக்கு மத்தியிலான நல்லிணக்க பொறிமுறைக்கு உயிரூட்டும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் 'நாட்டுக்காக ஒன்றிணைவோம்' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மக்கள் மத்தியில் நல்லிணக்க எண்ணக்கருவை பிரபல்யப்படுத்தவும் அதன் அர்த்தத்தை மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக கொண்டு செல்லும் நோக்குடனும் புத்தாண்டு விழாவும்  கொலொன்கொல்ல குளக்கரையில்  இடம்பெற்றது.

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து புனரமைக்கப்பட்ட கொலொன்கொல்ல குளத்தை மக்களிடம், ஜனாதிபதி  கையளித்தார். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் குளத்தில் புனித நீர் விடப்பட்டதுடன், மீன் குஞ்சுகளும் விடப்பட்டன.

இதன்போது ஆதிவாசிகளின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியொன்றும் இடம்பெற்றதுடன், அதிதிகளை கிராமிய வீடுகளுக்கு அழைத்துச் சென்று தேசிய கலாசாரத்திற்கேற்ப இனிப்பு பண்டங்களும் வழங்கப்பட்டன.

தேசிய புத்தாண்டு நிகழ்வை முன்னிட்டு விளையாட்டுக்கள், பல்வேறு கலாசார நிகழ்வுகளும் இலங்கை இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மரதன் ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனாதிபதியினால் பரிசில்கள் வழங்கப்பட்டன.

அத்தோடு,  கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபடுகின்றவர்களின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சித்திரை புத்தாண்டு விழாவொன்றும் சுதந்திர சதுக்க வளாகத்தில் நேற்று இடம்பெற்றது. இந்நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

Sat, 04/06/2019 - 18:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை