பயங்கரவாதக் குழுக்களை அழிக்க நாடெங்கும் தேடுதல்

7000 இராணுவ  வீரர்கள் களத்தில்

அவசரகால சட்டத்தின் கீழ் முப்படையினருக்கும் பொலிஸ் அதிகாரம்

மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதல்களை நடத்தி அப்பாவி உயிர்களை காவுகொண்ட தீவிரவாதக் குழுக்களை பூண்டோடு அழிப்பதற்கும் கைது செய்வதற்கும் பாரிய தேடுதல் வேட்டையில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் மூலை முடுக்கெங்கும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள இராணுவம், தாக்குதல் நடத்திய மற்றும் பதுங்கியுள்ள பயங்கரவாதக் குழுக்களையும், அடிப்படைவாதிகளையும் அடியோடு அழிப்பதுடன் பயங்கரவாதிகளை நாட்டைவிட்டு துரத்தியடிக்கும் எனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

தினகரன் பத்திரிகைக்கு நேற்று வழங்கிய விசேட செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்த இராணுவத் தளபதி, மூன்று தசாப்தகால யுத்தம் தொடர்பில் எமக்குள்ள அனுபவத்தின் பிரகாரம் பயங்கரவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் நாட்டிலிருந்து பூண்டோடு அழிப்பதுடன், பயங்கரவாதிகளுக்கு உரிய பாடத்தை கற்பித்து உலகுக்கும் இதனை எடுத்துக்காட்டுவோம் என்றும் குறிப்பிட்டார். அவசரகாலச் சட்டத்தின் மூலம் பொலிஸ் அதிகாரம்

Thu, 04/25/2019 - 06:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை