வெற்றி-தோல்வி சகஜம்

சஞ்ஜீவ ரணதுங்க

போட்டியில் வெற்றி பெறுவதோ அல்லது தோல்வியடைவதோ சகஜமான ஒரு விடயம். ஆனால் எவ்வாறு விளையாடினோம் என்பதே முக்கியமானதாகும் என்று முன்னாள் இலங்கை துடுப்பாட்ட வீரரும் தற்போதைய ஆனந்தா கல்லூரியின் பயிற்சியாளருமான சஞ்சீவ ரணதுங்க கூறுகிறார்.

சண்டே ஒப்சேர்வருக்கு வழங்கிய பேட்டியின் போதே அவர் இவ்வாறு கூறினார். ஒப்சேர்வர் சிறப்பான பாடசாலை வீரர் விருதை வென்றவருமான சஞ்சீவ, பாடசாலை வீரர்கள் போட்டியின் மேல் உள்ள விருப்பத்தினாலேயே விளையாடுகின்றனர். ஆனால் என்ன வழியிலாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறான மோசமான நடைமுறைகள் போட்டிகளை சீர்குலைத்து விடுகின்றன. ஆனால் என்ன வழியிலாவது வெற்றி பெற்றாக வேண்டும் என்ற மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறான மோசமான நடைமுறைகளை போட்டிகளை சீர்குலைத்து விடுகின்றன என்கிறார் சஞ்சீவ ரணதுங்க, தனது பாடசாலையின் பிரதான பயிற்சியாளராக அவர் இப்பொழுது முதல் கடமையாற்றுகிறார்.

லயனல் மெண்டிஸ் போன்ற பயிற்சியாளர்களை இப்போது நன்றிக்கடனுடன் ஞாபகப்படுத்துகிறோம். அவர்கள் எமக்கு விளையாட்டை மட்டும் சொல்லித் தரவில்லை. அதன் பண்புகளையும் சொல்லித்தந்தனர். பண்புகள் மற்றும் விழுமியங்களுடன் கூடிய அணிகளை கட்டியெழுப்புவதையே அவர்கள் அக்கறை காட்டினர். எவ்வாறாயினும் வெற்றிபெற வேண்டும் என்று அவர்கள் எமக்கு சொல்லித்தரவில்லை.

தனது மூத்த சகோதரர் அர்ஜுன ரணதுங்க இரண்டாவது முறையாக 1982 இல் ஒப்சேவர் சிறந்த பாடசாலை வீரர் விருதை வென்றதைக் கண்ட பின்னரே அந்த விருதை தானும் வெல்ல வேண்டும் என்று தனக்கு அக்கறையும் விருப்பமும் ஏற்பட்டதாக சஞ்சீவ கூறினார். “ஒரு கிரிக்கெட் பந்தில் இருந்து வெளியே வந்து எனது மூத்த சகோதாரர் அபூர்வமான இந்த விருதை பெற்றுக்கொள்வதை நான் கண்டேன். அது எனக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்திவிட்டது. 1987இல் அந்த விருதை, நான் மயிரிழையில் தவறவிட்டு விட்டேன். நான் அந்த வருடம் இரண்டாம் இடத்துக்கு தெரிவு செய்யப்பட்டதால் அதற்கு அடுத்த வருடமே எனது ஆசை நிறைவேறியது.

பெருமை மிகுந்த ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரர் விருதை வென்ற ஆறாவது ஆனந்தாக் கல்லூரி வீரராக சஞ்சீவ ரணதுங்க ஆவார். அவர் 8 பாடசாலை போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். அந்த வருடத்தின் பாரிய கிரிக்கெட் போட்டியிலும் கூட அவர் பங்குபற்றவில்லை. 12 போட்டிகளில் 8 போட்டிகள் மட்டும் அவர் 900 ஓட்டங்களுக்கு மேல் எடுத்திருந்தார். அந்த வருடம் அவர் இலங்கை இளைஞர் அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இடதுகை துடுப்பாட்ட வீரரான அவருக்கு இலங்கை ‘A’ அணி தலைமைப் பதவியுடன் அவர் இலங்கைக்காக டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் பங்குபற்றினார்.

1994 ஆகஸ்ட் 26ஆம் திகதி அவர் தனது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கண்டியில் அறிமுகமானார் பாகிஸ்தானுக்கு எதிராக இப்போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும் அவர் 9 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அந்த 9 போட்டிகளில் அவர் 531 ஓட்டங்களைப் பெற்றார். இதில் இரண்டு சதங்களும் இரண்டு அரைச்சதங்களும் அடங்குகின்றன. ஆனால் அவரது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அதற்கு முன்னரே 1994 ஆகஸ்ட் மூன்றாம் திகதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியே அவரது அறிமுகப் போட்டியாகும். டெஸ்ட் போட்டிகளில் அவர் அதிகபட்சமாக 118 ஓட்டங்களையும் ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்சமாக 70 ஓட்டங்களையும் பெற்றார்.

உண்மையிலே சிம்பாப்வேயுடனான 3 நாள் பயிற்சி போட்டியில் நான் சதம் அடித்தேன். எனவே தேர்வுக்குழுவினர் என்னை டெஸ்ட் போட்டியில் இணைத்துக்கொண்டனர்.

சிம்பாப்வேயில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் தான் பெற்ற இரு சதங்களும் சிறப்பானவை. சிம்பாப்வேயுடன் நடந்த ஒரு போட்டியில் இலங்கை கிரிக்கெட் தலைவராக இருந்த காமினி திஸாநாயக்க அகால மரணமானார். எனவே அப்போட்டியில் தோல்வியடைவதை தவிர்த்துக் கொள்வது எமக்குத் தேவையான இருந்தது. என்னைப் பார்த்த எனது மூத்த சகோதரர் அர்ஜுன சதம் அடிக்காமல் இந்தப் பக்கத்துக்கு வர வேண்டாம் என்று கூறினார். உடை மாற்றும் அறையையே அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார். ஆனால் சதம் அடித்த பின்னரே தான் மைதானத்தை விட்டு வெளியே வந்தேன்.

ஆனால் அடிலெய்ட்டில் நடைபெற்ற டெஸ்ட் போடடிகயில் நான் பெற்ற இரு அரைச்சதங்கள் மிகுந்த சவால் கொண்டவையாக இருந்தன.

தனது ஐம்பது வயதை அவர் கடந்த ஏப்ரல் 25ம் திகதி கொண்டாடினார். கிரிக்கெட் கழகங்களுக்கிடையே இடம்பெற்ற போட்டிகளில் அவர் அதிக ஓட்டங்களை குவித்திருந்தார். பிரபலமான அவரது மூத்த சகோதரர் அர்ஜுன ரணதுங்க சிக்சர்கள் அடிக்கவில்லை. ஆனால் உள்ளூர் போட்டிகளில் அவர் சிறந்தவொரு இடதுகை துடுப்பாட்ட வீரராக இருந்தார். ஆனந்த கல்லூரி மாணவராக இருந்த போது பாடசாலை கிரிக்கெட்டில் அவர் ஏராளமான ஓட்டங்களை குவித்தார். இதன் காரணமாகவே அவர் 1988 இல் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரர் விருதை வெல்ல முடிந்தது. அதன் பின்னர் 1994 இல் பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற போட்டித் தொடருக்கு அவர் தெரிவானார்.

ஒருநாள் போட்டிகளில் அவரது இரண்டாவது போட்டியிலேயே அவர் 70 ஓட்டங்களைப் பெற்றார். ஆனால் 13 ஒருநாள் போட்டிகளின் பின் அவரது ஓட்ட எண்ணிக்கை குறைந்ததையடுத்து அவரது இறுதி ஒருநாள் போட்டி 1996 ஜனவரியுடன் முடிவுற்றது. எனினும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் அதிக திறமை காட்டினார். சிம்பாப்வேயுடனான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் அவர் சதங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது. 7 டெஸ்ட் போட்டிகளின் பின்னர் அவரது ஓட்ட சராசரி 59.71 ஆக இருந்தது. அவ்வாறான துடுப்பாட்ட திறமை அவருக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் அவரது திறமை குறையத் தொடங்கியதையடுத்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். எனினும் 1997 ஜுனில் அவருக்கு மீண்டும் அணியில் சேர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஒரு போட்டியில் அவர் குறைந்த ஓட்டங்களை பெற்றதால் அவரது சர்வதேச கிரிக்கெட்டை முடிவுக்குக் கொண்டுவந்தது. இந்நிலையில் 2018/19 பருவ காலத்தில் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகள் முடிவுறும் நிலையில் உள்ளன. பாடசாலைகளுக்கிடையிலான பாரிய போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளுடன் இந்த பருவகாலம் முடிந்து விடும்.

ஒப்சேர்வர்- மொபிடெல் சிறந்த பாடசாலை வீரர் விருது வழங்கல் விழா கடந்த வருடம் அதன் 40ஆண்டு பூர்த்தியை முடித்துக் கொண்டது. அந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக 1979 ஆண்டின் ரோயல் கல்லூரியின் தலைவர் ரஞ்சன் மடுகல்ல கலந்து கொண்டார். 2018ஆம் ஆண்டுக்கான ஒப்சேர்வர்- மொபிடெல் விரதை கண்டி திரித்துவக் கல்லூரியின் ஹஸித போயகொடவுக்கு வழங்கப்பட்டது. 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் போது உலக சாதனையொன்றை அவர் நிலை நாட்டியமை குறிப்பிடத்தக்கது.

2017/18 பருவ காலத்தில் அவர் பாடசாலைகளுக்கிடையிலான 7 போட்டிகளில் 596 ஓட்டங்களை பெற்றார். அவரது சராசரி 85.29 ஆகும். அத்துடன் 19 வயதுக்குட்பட்டவர்களுக்காக கடைசியாக நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் அவர் இலங்கை அணிக்கு தலைமை தாங்கினார். அச்சுற்றுப்போட்டியில் இலங்கை அணி பிளேட் விருதை பெற்றது. அனுலா வித்தியாலயத்தை சேர்ந்த ஹஸித மாதவி சிறந்த சகலதுறை வீராங்கனை விருதை 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவின் கீழ் அவர் வென்றார்.

மாரிஸ்டெலா கல்லூரியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லஸித் குரூஸ்புள்ளே சிறந்த துடுப்பாட்ட வீரர் விருதையும் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் தலைவர் சலிந்து பீரிஸ் சிறந்த பந்து வீச்சாளர்களுக்கான விருதையும் மஹீஸ் திக்சன் சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் விருதையும் வென்றார். ஆண்டின் சிறந்த பாடசாலை அணியாக காலி ரிச்மன்ட் கல்லூரி தெரிவானது. சிறந்த நடத்தையுடன் கூடிய அணியாக கொழும்பு நாலந்தா கல்லூரி விருது வென்றது.

Thu, 04/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை