பங்களாதேஷ் தலைநகரில் இரு இஸ்லாமியவாதிகள் பலி

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் பாதுகாப்புப் படையினர் நேற்று மேற்கொண்ட தேடுதலில் இரு கடும்போக்கு இஸ்லாமியவாத சந்தேக நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

நள்ளிரவுத் தேடுதலின்போது தலைநகரின் பசிலா பகுதியில் வீடொன்றில் இருந்து பொலிஸ் கொமாண்டோ படையினர் துப்பாக்கித் தாக்குதலை எதிர்கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனார்.

இதனைத் தொடர்ந்த ஏற்பட்ட வெடிப்பில் அந்த வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன.

“இரு ஆயுததாரிகளின் சடலங்களை அந்த வீட்டுக்குள் இருந்து எமது குண்டு செயலிழக்கும் பிரிவினர் கண்டுபிடித்தனர். சக்திவாய்ந்த அந்த வெடிப்பால் உடல்கள் சிதறிக்கிடந்ததோடு அந்தப் பிரதேசத்தையே அதிரச் செய்தது” என்று லெப்டினன்ட் கேர்னல் ஆஷிக் பிலா ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டார்.

அருகில் இருக்கும் பள்ளிவாசலின் இமாம் மற்றும் பராமரிப்பாளர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

இஸ்லாமிய அரசு குழுவின் செல்வாக்கு பெற்ற ஆயுதக் குழுவொன்று 2016 ஆம் ஆண்டு டாக்கா விடுதி ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் 18 வெளிநாட்டிநர் உட்பட்ட 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இஸ்லாமியவாத கடும்போக்காளர்களை முடக்குவதில் பங்களாதேஷ் தீவிரம் காட்டி வருகிறது.

Tue, 04/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை