ஸ்பெயின் தேர்தலில் ஆளும் கட்சி பெரும்பான்மை இல்லை

ஸ்பெயினில் ஆளும் சோஷியலிஸ்ட் கட்சி நடந்து முடிந்த தேர்தலில் மீண்டும் வென்றுள்ளது. ஆனால், அந்த கட்சியால் முழுமையான பெரும்பான்மையை பெற முடியவில்லை. ஸ்பெயினில் நான்காண்டுகளில் நடந்த மூன்றாவது தேர்தல் இது. இந்த தேர்தலில் வலதுசாரிகள் கணிசமான வாக்குகளை வென்றுள்ளனர்.

வலதுசாரி கட்சியான வாக்ஸ் கட்சி 10.3 வீத வாக்குகளை பெற்றுள்ளது. அதாவது 350 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஸ்பெயின் பாராளுமன்றத்தில் வொக்ஸ் கட்சி 24 இடங்களை பெறவுள்ளது. முறைப்படுத்தப்படாத குடிப்பெயர்வு, பெண்ணியம் ஆகியவற்றுக்கு எதிராக கருத்துடையது இந்த வாக்ஸ் கட்சி.

ஸ்பெயினில் 1970களில் இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் முதல்முறையாக ஒரு வலதுசாரி கட்சி பாராளுமன்றத்தில் நுழையவுள்ளது.

பிரதமர் பெட்ரோ சான்சேஸின் கட்சி 29 வீத வாக்குகளை வென்றிருக்கும் நிலையில் அவர் ஆட்சி அமைப்பதற்கு இடதுசாரி பொடேமோஸ் மற்றும் பிராந்திய கட்சிகள் அல்லது மைய வலதுசாரிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.

Tue, 04/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை