அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலில் மூன்றரை கிலோ ஹெரோயின் மீட்பு

லக்ஷ்மி பரசுராமன்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து சுமார் மூன்றரை கிலோ ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குறுந்துகஹஹெடக்ம எனும் இடத்திலுள்ள நுழைவாயில் அருகிலிருந்த கராஜ் ஒன்றுக்குள்ளிருந்தே பொலிஸார் இந்த ஹெரோயின் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.

இதன் பெறுமதி சுமார் மூன்றரைக் கோடியிலும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது. போதைப் பொருள் நடவடிக்கைகளை தடுக்கும் பொலிஸார் நேற்று இணையதளத்தை பயன்படுத்தி தென் மாகாணத்தில் நடத்திய விசேட தேடுதலின் விளைவாகவே இப்போதைப் பொருள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளது.

ஹெரோயின் போதைப்பொருள் கராஜூக்குள் பொதி செய்யப்பட்ட நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. சம்பவத்தின்போது எவரும் அப்பகுதியில் இருக்காததனால் இதுவரை எவரும்

கைது செய்யப்படவில்லையென்றும் பொலிஸார் தெரிவித்தனர். இப்போதைப் பொருளின் உரிமையாளர் மற்றும் கராஜ் உரிமையாளரைத்தேடி பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதே வேளை வத்தளை திக்ஓவிட்ட பகுதியிலும் சுமார் ஒரு கிலோ 37 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வத்தளை பொலிஸ் பிரிவிலுள்ள திக்ஓவிட்ட பகுதியில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

38 வயதான சுரங்க சுஜீவ அல்விஸ் என்ற சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

Sat, 04/20/2019 - 06:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை