றவூப் ஹக்கீம் கேடயத்திற்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி

றவூப் ஹக்கீம் கேடயத்திற்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் மடவளை​ டெடிகிறேட்ஸ் அணி சம்பியனானது. (30) மடளை மதீனா மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்யை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மடவளை கிளை மற்றும் மதீனா மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் என்பன இணைந்து ஒழுங்கு செய்திருந்தன.

எட்டு அணிகள் பங்கு கொண்ட இப்போட்டி 6 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இறுதிப்போட்டியில் மடவளை டெடிகிறேட்ஸ் அணியும், மடவளை தண்டர்ஸ் அணியும் போட்டியிட்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய மடவளை டெடிகிறேட்ஸ் அணி 42 ஓட்டங்ளை ஒரு விக்கெட் இழப்பிற்குப் பெற்றது.

பதிலுக்கு ஆடிய மடவளை தண்டர்ஸ் அணியால் 10 ஓட்டங்கள் மட்டுமே பெற முடிந்ததால் போட்டியில் டெடிகிறேட்ஸ் அணி வெற்றி பெற்றது.

மேற்படி போட்டியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் றவூப் ஹக்கீம் கிண்ணங்ளை வழங்குதையும் இறுதிப்போட்டியில் பங்கு கொண்ட அணிகளையும் காணலாம்.

அக்குறணை குறூப் நிருபர்

Tue, 04/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை