உயிரிழந்த பன்றியின் மூளையின் உயிரணுக்களை செயல்படவைப்பு

உயிரிழந்த பன்றிகளின் மூளைகளில் உயிரணுக்களை மீண்டும் செயல்படச் செய்வதில் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெற்றி கண்டுள்ளனர்

ஆய்வின் கண்டுபிடிப்புகளால் வாதம், மூளையில் ஏற்படும் காயங்களைக் குணப்படுத்த எதிர்காலத்தில் வழி ஏற்படலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் பன்றிகளின் மூளைகளைச் சுயநினைவுக்குத் திரும்பக் கொண்டுவருவதில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மூளைக்கு இரத்தவோட்டம் தடைபட்டால் மூளை அணுக்களின் செயல்பாடு முழுமையாக நின்றுவிடும் என்று இதற்கு முன்னர் நம்பப்பட்டது. அதில் உண்மையில்லை என்பது புதிய ஆய்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

உயிரணுக்கள் மீண்டும் செயல்பட ஆரம்பித்தபோதும், மூளை முழுமையாக உயிர்பெறவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Fri, 04/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை