இலங்கை வலைப்பந்து அணி பங்கேற்கும் தொடர் சுகததாச அரங்கில் ஆரம்பம்

இலங்கை, இலங்கை இளையோர், மலேசியா மற்றும் கென்யா ஆகிய நான்கு அணிகள் மோதும் வலைப்பந்து போட்டித் தொடர் சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நேற்று ஆரம்பமானது. இந்தத் தொடர் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கை வலைப்பந்து சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்படும் இந்தத் தொடரில் இலங்கை, மலேசியா மற்றும் கென்ய தேசிய அணிகளுடன் இலங்க இளையோர் குழாமும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடர் ரவுண்ட் ரொபின் அடிப்படையில் நடைபெறுவதோடு, ஒவ்வொரு அணியும் 3 போட்டிகளின் விளையாடும். அதன் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்திவிருப்பதோடு அடுத்த இரண்டு அணிகளும் 3ஆவது இடத்தை பிடிப்பதற்காக மோதும்.

கடந்த 2018 மே மாதமும் இலங்கை வலைப்பந்து சம்மேளனம் சிங்கப்பூர் மற்றும் பீஸ்டாா் வலைப்பந்து கழகத்தை இணைத்த தொடர் ஒன்றை நடத்தி இருந்தது. இலங்கை தேசிய அணி ஒன்பது ஆண்டுகளின் பின் ஆசிய சம்பியனாவதற்கு அந்தத் தொடர் பெரிதும் உதவியதோடு இலங்கைக் குழாத்திற்கு சர்வதேச அளவில் திறமையை வெளிக்காட்ட சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தியது.

ஜப்பானில் எதிர்வரும் ஜூன் 29 தொடக்கம் ஜூலை 7 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் ஆசிய இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை இளையோர் அணி பங்கேற்கவிருப்பதோடு தேசிய அணி வரும் ஜூலை 12 தொடக்கம் 21 வரை நடைபெறவிருக்கும் வலைப்பந்து உலகக் கிண்ணத்திற்காக இங்கிலாந்து பயணிக்கவுள்ளது.

Tue, 04/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை