உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டோனிகிளிப் தோட்ட மேற் பிரிவில் இன்று (17) காலை 8மணியளவில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இத்தோட்டத்தில் 24ம் இலக்க தேயிலை மலையில் இவ் சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள, அதேவேளை மேலும் பல சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேற்படி சிறுத்தை உயிரிழந்த இடத்தில் நாய் ஒன்றின் உடற்பாகங்களும் இருந்துள்ளன.

குறித்த தேயிலை மலையில் தொழில் செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் சிறுத்தையொன்று இறந்த நிலையில் கிடப்பதை அவதானித்து, திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தை கேள்வியுற்று ஸ்தலத்திற்கு விரைந்துள்ள திம்புள்ள பத்தனை பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, இது சம்மந்தமாக வனவிலங்கு பாதுகாப்பு சபைக்கு அறிவித்துள்ளதையடுத்து உயிரிழந்த சிறுத்தையை மரண பரிசோதனை செய்வதற்காக வனவிலங்கு அதிகார சபைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இத்தோட்டத்தில் சில மாதங்களுக்கு மேலாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதுடன் லயன் குடியிருப்பு பகுதிகளுக்கும் இவைகள் வந்து சென்றுள்ளதாகவும், காவலுக்காக வளர்க்கப்படுகின்ற நாய்களையும் இச் சிறுத்தைகள் வேட்டையாடி உண்ணுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

(ஹற்றன் சுழற்சி நிருபர்)

Wed, 04/17/2019 - 13:26


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக