புர்கினா பாசோ தேவாலயத்தில் தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு

புர்கினா பாசோ கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் துப்பாக்கிதாரிகளால் நான்கு வழிபாட்டாளர்கள் மற்றும் பாதிரியார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

வடக்கின் சிறு நகரான சில்காட்ஜியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் மேலும் இருவர் காணாமல்போயிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பாசோவில் ஜிஹாதிக்களின் வன்முறைகள் வெடித்தது தொடக்கம் தேவாலயத்தின் மீது நடத்தப்படும் முதல் தாக்குதலாக இது உள்ளது. இதற்கு முன்னர் முஸ்லிம் மதத் தலைவர்கள் மற்றும் இமாம்கள் இலக்காகி உள்ளனர்.

“ஆராதனை முடிந்து வழிபாட்டாளர்கள் தேவாலயத்தில் இருந்து வெளியேறும்போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக” அந்த தேவாலயத்தின் உறுப்பினர் ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டார்.

“தாக்குதல்தாரிகள் மோட்டார் சைக்கிள்களில் வந்திருந்தனர். ஆரம்பத்தில் வானை நோக்கிச் சுட்ட அவர்கள் பின்னர் கூட்டத்தை நோக்கி சுட ஆரம்பித்தனர்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஐ.எஸ் குழு, அன்சாருல் இஸ்லாம் என பல ஜிஹாத் குழுக்களும் புர்கினா பாசோவில் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tue, 04/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை