இலங்கை திட்டமிடல் சேவை; 22 சிறுபான்மையினர் நேர்முகப் பரீட்சைக்கு தேர்வு

இலங்கை திட்டமிடல் சேவையின் மூன்றாம் தரத்திற்காக நடாத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த 22பேர் நேர்முகப் பரீட்சைக்காக பொது நிருவாக அமைச்சினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

தெரிவு செய்யப்பட்ட தமிழ் சமூகத்தைச் சேர்ந்தோரின் விபரம் வருமாறு; 

ஜே. ரெமின்டன், எப். கென்ஜீட், எம். ஜெபமையூரன், ரி. தாரிணி. வீ. கிருஸாளினி, எம். அன்ரனிஸ், எஸ். சர்மி, பி. பிரிந்தினி, ஆர். ஜூட் மைக்கல்ராஜ், பி. அர்ச்சனா, கே. இலக்கியா, எஸ். கஜீரதன், பீ. ரேவதி, எஸ். நிரோஜன், ரி. திவாகரி, எம். அனோஜா ஆகிய 16பேராவர். 

தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தோரின் விபரம்; 

எஸ். சிப்கா, கே. றுஸ்தா, ஏ. எம். எம். நபீஸ், ஐ. எம். நாஸிக், ஏ. ஏ. எஸ். றிபாயா, ஜே. பாதிமா றிஸ்னா ஆகிய ஆறு பேருமாவர். 

இலங்கை திட்டமிடல் சேவைக்கு பல்கலைக்கழகங்களில் வகுப்பு சித்தி பெற்றவர்கள் மட்டுமே அச் சேவையின் சேவை பிரமாணக் குறிப்பிற்கமைய சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர்.

தெரிவு செய்யப்பட்டவர்களை இலங்கை திட்டமிடல் சேவையின் கிழக்கு மாகாண சங்க செயலாளர் ஏ. எல். எம். அஸ்லம் வாழ்த்தியுள்ளார். 

திறந்த போட்டிப் பரீட்சை மூலம் மேற்படி சேவைக்கு நேர்முகப் பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்டோரில் 79சிங்களவர்களும், 06முஸ்லிம்களும், 16தமிழர்களுமாக 101பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 

நேற்று வெளியாகிய செய்தியில் ஐ. எம். நாஸிக் என்பவரது பெயர் விடுபட்டிருந்தது. தவறுக்கு வருந்துகிறோம்.     

(சாய்ந்தமருது குறூப் நிருபர்)

Fri, 04/12/2019 - 08:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை