நீரில் எண்ணெய்; சுன்னாகம் பிரதேசவாசிகளுக்கு ரூ. 2 கோடி இழப்பீடு

RSM
நீரில் எண்ணெய்; சுன்னாகம் பிரதேசவாசிகளுக்கு ரூ. 2 கோடி இழப்பீடு-Chunnakam Oil Problem

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

யாழ்ப்பாணம் சுன்னாகம் அனல் மின் நிலையத்தின் நிர்மாணம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் பிரதேசவாசிகளுக்கு ரூபா 2 கோடி இழப்பீடு வழங்குமாறு குறித்த மின் உற்பத்தி நிலையமானஈ நொதர்ன் பவர் தனியார் நிறுவனத்திற்கு (Nothern Power (Pvt) Ltd) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த அடிப்படை உரிமை உரிமை மீறல் மனு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (04) அறிவிக்கப்பட்டது.

பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, எல்.டி.பி. தெஹிதெனிய ஆகிய மூவர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அனல் மின் உற்பத்தி நிலையத்தினால் வெளியிடப்படும் எண்ணெய், கிறீஸ் ஆகியன பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் சேர்வதன் காரணமாக, பிரதேசத்திலுள்ள நீர் அசுத்தம் அடைந்துள்ளதாக மனுதாரர்கள் தங்களது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

வடமாகாண சபையின் அனுமதியுடன் 2015ஆம் ஆண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதோடு, 2016 ஜனவரி 31 ஆம் திகதி அதன் நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு தெரிவித்து இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Thu, 04/04/2019 - 16:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை